19.05.1980 இல் மரணித்த கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகம் மற்றும் காந்தீயம் ஆகிய அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான தோழர் ஊர்மிளாதேவி அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று……
தோழர் ஊர்மிளாதேவி அவர்கள் பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்து அதற்காக அயராது போராடி வந்தார். மலையக மக்களின் நல்வாழ்விற்காக அவர்களின் வாழ்வை மேம்படுத்த ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தை இயக்கி செயற்படுத்தி வந்தார். காந்தீய அமைப்பில் அவர் குடியேற்றப் பணிகள், நலன்புரி நடவடிக்கைகள், போன்ற பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.