ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளுக்கு அமைய பிரித்தானிய அரசாங்கம் செயற்படவேண்டும். அத்துடன் இலங்கையின் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும் என பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார செயலாளர் டேவிட் லாம்மி வலியுறுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

தமிழர்களுடன் தோளோடு தோள் நிற்குமாறு தாம் பிரித்தானிய அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக அவர் கோரியுள்ளார். முள்ளிவாய்க்கால் குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேடுதல் முன்னோக்கி கொண்டு வரப்பட வேண்டும்.

இதன்மூலமே பிரித்தானியா உலகெங்கிலும் உள்ள சமூகங்களுடன் இணைந்துஇ தமிழ் சமூகத்துக்கு அமைதி மற்றும் அரசியல்ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்ப உதவ முடியும் எனவும் பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார செயலாளர் டேவிட் லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார்.