ஜனாதிபதி வௌிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதால், அவர் வகித்த அமைச்சுகளின் பொறுப்புகள் பதில் அமைச்சர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி நாடு திரும்பும் வரை குறித்த இரு அமைசுகளின் பொறுப்புகளையும் பதில் அமைச்சர்கள் வகிக்கவுள்ளனர். Read more