25.05.1987இல் மரணித்த கழகத்தின் முதலாவது மன்னார் மாவட்ட தலைவர் தோழர் நடேசன் (பொன்னுத்துரை செல்வராஜா – வவுனியா) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
தோழர் நடேசன் அவர்கள்,
கழகத்தின் மன்னார் மாவட்ட முதலாவது தளபதியாக செயற்பட்டவர்.
மன்னார் வவுனியா பகுதிகளில் படையினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்.
1986ல் புலிகள் எமது அமைப்பினை தடை செய்ததாக அறிவித்தபோது, கழக முன்னெடுப்புக்களை மேற்கொண்டதுடன் ஆங்காங்கே இருந்த தோழர்களை ஒருங்கிணைத்தார்.
கழகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு அயராது பாடுபட்டு வந்தார்.