Header image alt text

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அலி சப்ரி ரஹீமை இராஜினாமா செய்யுமாறு கோருவதற்கான தீர்மானமொன்றை கொண்டு வருவது தொடர்பில், பாராளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இன்று (26) மாலை நடைபெற்ற பாராளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழுவில், கட்சித் தலைவர்களால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. Read more

கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமை தொடர்பாக  ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்துள்ளார். நேற்று (25) நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். ஜப்பானுக்கு  விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  ஜப்பான் பிரதமர் Fumio Kishida-வை டோக்கியோ நகரில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். Read more

இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால், நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை (Nuclear Power Plant) நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தொடர்பில் பதிவிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

கொழும்பின் முன்னாள் மேயர் ரோஸி சேனாநாயக்க ஜனாதிபதியின் உள்ளூராட்சி செயற்பாடுகள் தொடர்பான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் அதற்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.