ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் லண்டன் தோழர்கள் முகுந்தன் 50,000/- சிவபாலன் 20,000/-, சுவிஸ் தோழர் வசந்தன் 40,000/- என மொத்தம் ரூபா 110,000/- நிதியில் திருகோணமலை பாலையூற்று ரெட் டயமண்ட் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்வனவு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கழகத்தின் சமுக மேம்பாட்டுப்பிரிவின் ஊடாக இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர், கட்சியின் மாவட்ட பொருளாளர் தோழர் பகீர் மற்றும் தோழர்கள் வசந்தி, மோகன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.