இலங்கையின் மூத்த இராஜதந்திரி கலாநிதி. ஜயந்த தனபால தமது 85ஆவது வயதில் இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று காலை 10 மணியளவில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர அதிகாரியாகப் பணியாற்றினார். அத்துடன், கலாநிதி. ஜயந்த தனபால ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் தூதுவராக பணியாற்றினார்.

1998ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான அலுவலகத்தின் துணைச் செயலாளராகவும் அவர் பணியாற்றினார்.