சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்ய விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு(27) நாடு திரும்பினார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற நிக்கேய் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரை நிகழ்த்தியதுடன், அங்கு ஆசிய நாடுகள் பலவற்றின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.