வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று(27) நடைபெற்றது. வட மாகாணத்தில் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் வட மாகாண மக்களின் நலனிற்காக இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸிடம் கூறியுள்ளார்.