Posted by plotenewseditor on 30 June 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 30 June 2023
Posted in செய்திகள்
30.06.1986இல் யாழ். கைதடியில் மரணித்த தோழர் பார்த்தி (ஏகாம்பரம் பார்த்தீபன் – திருகோணமலை) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
Posted by plotenewseditor on 30 June 2023
Posted in செய்திகள்
அஸ்வெசும திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கான மேன்முறையீடுகள், ஆட்சேபனைகள் என்பன ஒன்லைன் மூலம் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று பதிவு செய்யப்பட்டன. வவுனியா மாவட்டத்தின் தோணிக்கல் , கூமாங்குளம், மூன்றுமுறிப்பு , வெளிக்குளம் , கோவில்குளம் ஆகிய ஜந்து கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மக்களின் மேன்முறையீடுகளும் ஆட்சேபனைகளும் இன்று பதிவு செய்யப்பட்டன. இதன்போது, 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் தமது முறையீடுகளை முன்வைத்தனர்.
Posted by plotenewseditor on 30 June 2023
Posted in செய்திகள்
புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி – கரிக்கட்டை பகுதியில் இன்று (30) காலை பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ பரவியுள்ளது. பஸ் என்ஜின் வெப்பமடைந்தமையினால், தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுவதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, தீயணைக்கும் வாகனங்களின் உதவியுடன் காலை 6 மணியளவில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், பஸ் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 June 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 29 June 2023
Posted in செய்திகள்
29.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் இராமநாதன் (பிச்சறால் இராசேந்திரன்- உவர்மலை), சேகர் (சித்திரவேல் செல்வராஜா- செட்டிக்குளம் ) ஆகியோரின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
Posted by plotenewseditor on 29 June 2023
Posted in செய்திகள்
700 மில்லியன் டொலர் நிதியை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது. இதற்கு உலக வங்கியின் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைத்துள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைபேறுதன்மையை கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்கு குறித்த நிதியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 June 2023
Posted in செய்திகள்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக R.M.A.L. ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளராக செயற்பட்டிருந்தார் M.A. பத்மசிறி, சந்திரவங்ச பெரேரா , அமீர் மொஹமட் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் L.T.B. தெஹிதெனிய நியமிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 28 June 2023
Posted in செய்திகள்
28.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் ஆனந்தன் (சுப்பையா அருளானந்தம் – முகத்தான்குளம்) அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் ….
Posted by plotenewseditor on 28 June 2023
Posted in செய்திகள்
நிதி அமைச்சு முன்வைத்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை இன்று பிற்பகல் ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கடன் மறுசீரமைப்புத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அந்த திட்டத்தை அமைச்சரவை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. Read more