இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளுக்காக கிராமசேவகர் இதுவரையில் தங்களது வீடுகளுக்கு வரவில்லையாயின் அது குறித்து அறியப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய கிராமசேவகர் சங்கம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. வாக்காளர் பெயர்ப்பட்டியலின் திருத்தங்களுக்கு அமைவான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை ஒரு மாத காலத்துக்குள் நிறைவுசெய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறியப்படுத்தி உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதியுடன் குறித்த காலம் நிறைவடைகிறது. எனினும் இந்தப் பணிகளை முன்னெடுப்பதற்காகஇ சில வீடுகளுக்கு செல்லும்போது நாய்களின் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை கடந்த காலங்களில் ஏற்பட்டது.
இவ்வாறாக கிராமசேவகர்கள்இ நடைமுறை ரீதியாக பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்தப் பணியை முன்னெடுக்கின்றனர். விரைவாக இந்தப் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் தேர்தல்கள் ஆணைக்குழுஇ இதற்காக போதிய கால அவகாசத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய கிராமசேவகர் சங்கத்தின் தலைவர் கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.