ஷெல் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் எரிபொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) நிறுவனத்துடன் இலங்கை கையெழுத்திட்டது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 முன்னதாக கடந்த மே 22 ஆம் திகதியன்று முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக்குடனும் இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் எம்.பி.டி.யு.கே. மாபா பத்திரன மற்றும் சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சென் செங்மின் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

சினோபெக் நிறுவனத்துக்கு, உரிமம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 45 நாட்களுக்குள் இலங்கையில் நடவடிக்கைகளைத் தொடங்க உள்ளது.