Header image alt text

09.06.1985இல் மரணித்த தோழர் சுதன் (மா.சிவஞானம்) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று……

2023 வாக்காளர் இடாப்பில் ஒன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. www.elections.gov.lk என்னும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, வாக்காளர்கள் தம்மை பதிவு செய்ய முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார். 2023 வாக்காளர் இடாப்பிற்கான திருத்தங்கள் இந்நாட்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவங்கள் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார் Read more

அவசர அபிவிருத்தி நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படும் சலுகை கடனுதவியைப் பெறுவதற்கு இலங்கைக்கு தகுதியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளது. குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் சலுகை உதவிகளை பெற்றுக்கொள்வதன் மூலம், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தல், வறிய மற்றும் பாதிப்பை எதிர்நோக்கக்கூடிய  மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட அவசர அபிவிருத்தி நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இலங்கையின் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (08) நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகார பரவலாக்கம்  போன்ற விடயங்களில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. Read more