வவுனியா – மன்னார் மார்க்கத்தின் பறயனாலங்குளம் 29 ஆவது மைல்கல் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பாடசாலைக்கு தனது மகளை அனுப்பச் சென்ற தாயும் அவரது 6 வயதான மகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர். வவுனியா – கன்னாட்டியை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.  வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நின்றவர்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மற்றொரு மகள் டிப்பர் வாகனத்தைக் கண்டதும் விலகிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை பறயனாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.