18.06.2021ல் கனடாவில் மரணித்த தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள்….
யாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாக கொண்ட இவர் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினராவார். கழகத்தின் உரும்பிராய் பிரதேச அமைப்பாளராக இருந்த காலங்களில், கழகத்தின் இராணுவ செயற்பாடுகளில் மாத்திரமன்றி வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதிலும் அவற்றை பலப்படுத்துவதிலும் கடுமையாக உழைத்தார்.
செயலதிபர் மீது மிகுந்த பற்றும் விசுவாசமும் கொண்ட இவர் எந்நேரமும் எளிமையாகவே தோற்றமளிப்பார். தோழர்களுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தி அவர்களை அரசியல் ரீதியில் வளர்த்தெடுப்பதிலும் மிகுந்த அக்கறை காட்டினார்.
கழகம் தனது செயற்பாடுகளை தளத்தில் தற்காலிகமாக நிறுத்தும்வரை கழக செயற்பாடுகளில் தன்னை மிகத்தீவிரமாக ஈடுபடுத்தியிருந்தார்.
இவரது சகோதரர் 1988ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டபோதுகூட துவண்டு விடாமல் ஏனைய தோழர்களை பாதுகாத்து நின்ற இவர் பின்னர் கனடா சென்று வாழ்ந்தபோதும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்யவேண்டுமென்பதிலும் எதிர்கால தலைமுறையினரின் கல்வியறிவை மேம்படுத்த வேண்டுமென்பதிலும் கவனம் செலுத்தியிருந்தார்.