இந்தியாவின் உதவியால் இலங்கையின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற அமைதி மாநாட்டில் பங்கேற்ற விஜயதாச ராஜபக்ஷ செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதுடன் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார். Read more