எமது கட்சியின் மகளீர் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பும் முல்லைத்தீவு, குமுழமுனை, தண்ணீரூற்று அரிமத்தியா ஆலய மண்டபத்தில் இன்று பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தோழர்கள் த.சிவபாலன் (லண்டன்) மு.முகுந்தன் (லண்டன்) வி.ரட்ணகுமார் (சுவிஸ்) ஆகியோர் அனுசரணை வழங்கியிருந்தார்கள்.
கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் திருமதி கேதினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மூத்த ஊடகவியலாளரும், பிரபல அரசியல் ஆய்வாளருமான ஜதீந்திரா அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கட்சியின் பொருளாளர் க.சிவநேசன்(பவன்), கட்சியின் தேசிய அமைப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தராஜா(பீற்றர்), கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் இரா.தயாபரன், கட்சியின் இளைஞர் பிரிவுப் பொறுப்பாளர் யூட்சன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
நிகழ்வின்போது மகளிர் அமைப்புக்களின் தலைவிகள் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, மகளிர் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் நினைவுப் பரிசில் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர்,
ஜெர்மன் தோழர் திலீபன் குடும்பத்தினர், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், மாவட்ட செயலாளர் சிவலிங்கம் மாஸ்டர், மாவட்ட பொருளாளர் விக்னேஸ்வரன், மாவட்ட இளைஞர் பிரிவு பொறுப்பாளர் மயூரன்,
கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் மதியழகன், மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் வசந்தி, கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சிவபாலசுப்பிரமணியம் ஆகியோரும்,
கட்சியின் மகளிர் அமைப்புக்களின் தலைவிகள், மகளிர் அமைப்பு அங்கத்தவர்கள், கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், கட்சியின் முன்னாள் பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், வேட்பாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.