தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக R.M.A.L. ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளராக செயற்பட்டிருந்தார் M.A. பத்மசிறி, சந்திரவங்ச பெரேரா , அமீர் மொஹமட் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் L.T.B. தெஹிதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் ஏனைய உறுப்பினர்களாக நிமல் புஞ்சிஹேவா, தையமுத்து தனராஜ், பேராசிரியர் பாத்திமா ஃபர்சானா ஹனீஃபா, கலாநிதி கெஹான் குணத்திலக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதியினால் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.