Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் எதிர்வரும் 13ம் திகதிமுதல் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றது.

Read more

01.07.1991இல் வவுணதீவில் மரணித்த தோழர் குருசாமி (வீமாப்போடி அருளானந்தம் – கொத்தியாவளை) அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

கல்வி அமைச்சின் திறன்கள் அபிவிருத்திஇ தொழில் கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படும் ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்களில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Read more

குழந்தை கதிரியக்கவியல் தொடர்பான இலங்கையின் ஒரேயொரு நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட மருத்துவர்கள் சங்கத்தின் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் தகவல் வழங்கியுள்ள அவர், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் சுகாதாரத் துறைக்கு குறைந்தது 4,000 நிபுணத்துவ மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். எனினும் தற்போது, 2000 மருத்துவர்களே சேவையில் உள்ளனர். Read more