Header image alt text

இஸ்ரேல் மற்றும் இலங்கை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. டெல் அவிவில் இருந்து கட்டுநாயக்கவிற்கு நேரடி பயணிகள் விமான சேவையை முன்னெடுப்பது தொடர்பில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இரு நாட்டு சிவில் விமான சேவை நிறுவனங்களுக்கும் இடையில் அண்மையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. Read more

வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் ஏழாவது கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (04) முதல் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 2019/2020/2021 ஆண்டுகளில் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட உயர் தர பரீட்சைகளில் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read more