விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார். விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சினால் கடந்த வாரம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. Read more