Header image alt text

04.07.2003இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் ஜஸ்டின் (வைரமுத்து மேகநாதன்) அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

சீன தேசிய விமான சேவையான “எயார் சைனா” விமான சேவை, இலங்கைக்கான போக்குவரத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதன் முதலாவது விமானம், நேற்றிரவு(03) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. சீன தேசிய விமான சேவை 03 வருடங்களுக்கு முன்னர் கொவிட் தொற்று காரணமாக இலங்கைக்கான போக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுத்தியது. எயார் சைனா விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் வகையில் CCA – 425 விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்றிரவு வந்தடைந்தது. Read more

கொவிட் தொற்றுக்கு பின்னர் இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் இரத்மலானையிலிருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் முகாமையாளர் லக்‌ஷ்மன் வன்சேகர தெரிவித்தார். குறித்த விமானத்தினூடாக கொழும்பிலிருந்து 1 மணித்தியாலம் 10 நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை சென்றடைய முடியும். Read more

விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள சில வைத்தியசாலைகளில் சிகிச்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்(GMOA) தெரிவித்துள்ளது. பிரதான வைத்தியசாலைகளிலும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் வினவிய போது, இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் சுமார் 30 விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வு பெறவுள்ளதாக கூறினார். Read more