சீன தேசிய விமான சேவையான “எயார் சைனா” விமான சேவை, இலங்கைக்கான போக்குவரத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதன் முதலாவது விமானம், நேற்றிரவு(03) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. சீன தேசிய விமான சேவை 03 வருடங்களுக்கு முன்னர் கொவிட் தொற்று காரணமாக இலங்கைக்கான போக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுத்தியது. எயார் சைனா விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் வகையில் CCA – 425 விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்றிரவு வந்தடைந்தது.

இதன்போது இலங்கைக்கான சீனத்தூதுவர், சீன தேசிய விமான சேவையின் ஆசிய பசுபிக் வலய முகாமையாளர் உள்ளிட்ட பலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த விமானத்தில் 142 பேரும் 09 பணியாளர்களும் நாட்டை வந்தடைந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று(04) முதல் வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் மாத்திரம் சீனாவிலிருந்து எயார் சைனா விமானம் இலங்கைக்கான சேவையை முன்னெடுக்கவுள்ளது​.