நீடித்த கடன் வசதியை அனுமதித்த போது சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட இலக்குகளில் முக்கிய இலக்கான ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் நடவடிக்கை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் இரண்டாவது நாளாக இன்றும் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், திருத்தங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி வரை அதனை ஒத்திவைக்க ஆளும் கட்சியினர் பிரேரணை முன்வைத்தனர்.

எதிர்க்கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்பு வௌியிட்டதால், இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டதுடன், சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு எதிர்வரும்19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.