Header image alt text

12.07.2006இல் யாழில் மரணித்த தோழர் வோல்ரர்) (செபஸ்ரியான் இருதயராஜன்- யாழ்ப்பாணம்) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான பயணங்கள்  ஜூலை 16 முதல் தினசரி சேவையாக மாற்றப்படும் என இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறும் இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் 67 ஆவது ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் இதனை கூறியுள்ளார். Read more

இந்தியப் பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று உச்சபட்ச அதிகாரப் பரவலாக்கலை வழங்க வேண்டும், அந்த இறுதித் தீர்வை எட்டுவதற்குள் உடனடியாக 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பாக செயற்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து அனுப்பும் கடிதத்தில் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

Read more

மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடைநடுவே நிறுத்தப்பட்ட கொழும்பு மாநகரின் 10 நடுத்தர வர்க்க வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப்பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புபட்ட முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சின் செயலாளர் W.S.சத்தியானந்தன் தெரிவித்தார். Read more