Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வீரமக்கள் தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி இராஜ கிராமத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இராஜகிராம இணைப்பாளர் சொக்கன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், கட்சியின் வடமராட்சி இணைப்பாளர் பரஞ்சோதி மற்றும் கட்சியின் முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கிஷோர் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Read more

Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 34வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இன்று (13.07.2023) காலை 10.00 மணியளவில் நினைவில்லப் பொறுப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி லிங்கநாதன் (தோழர் விசுபாரதி) அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

Read more

அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவை முன்னிட்டு லண்டனில் வசிக்கும் எமது கட்சி செயற்பாட்டாளர் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் தனது இன்று (11.07.2023) காலை வவுனியா பொன்னாவரசன்குளம் திருநாவற்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட வறுமைக் கோட்டின்கீழான 150 குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளார்.

Read more

தாயகக்குரல் –

Posted by plotenewseditor on 13 July 2023
Posted in செய்திகள் 

தாயகக்குரல் –
அமிர்தலிங்கம் அவர்களையும் நினைவுகூரத் தகும் –
இன்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கம் அவர்கள் சூழ்ச்சிகரமான முறையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முப்பத்திநான்காவது நினைவுநாள்.
புலிகளால் கொல்லப்பட்டதால் அமிர்தலிங்கம் அவர்கள் நிச்சயம் துரோகியாகத்தான் இருப்பார் எனும் மனக்கணக்கில் அல்லது மரணத்திற்கு அஞ்சி, தமது தலைவரின் நினைவுநாளைப் பற்றி உச்சரிக்க சொந்தக் கட்சியினரே – இன்றைய தமிழரசுக்கட்சித் தலைவர்கள் – ஒதுங்கி நின்ற வேளையில் புளொட் அமைப்பினரே அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுநாளை தமது மறைந்த தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுநாளுடன் ஒன்றுபடுத்தி வீரமக்கள் தினமாக வருடந்தோறும் நினைவுபடுத்தி வருகிறார்கள்.

Read more

வடக்கு ரயில் மார்க்கத்தில் புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான பகுதி இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இன்று (13) காலை கொழும்பில் இருந்து புறப்பட்டுச்சென்ற யாழ். தேவி ரயிலில் போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட உள்ளிட்டவர்கள் அனுராதபுரத்தை சென்றடைந்தனர். இதன்போது, அமைச்சரை யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். Read more

இந்தியன்  ஒயில்  (Indian Oil) நிறுவனத்தின் யோசனைக்கு அமைய, இந்தியாவின் நாகப்பட்டினம்  – திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இடையே  எண்ணெய்க் குழாய் கட்டமைப்பை நிறுவுவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் நேற்று (12)  மீண்டும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. Read more

13.07.1989ல் மரணித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாளும் வீரமக்கள் தின ஆரம்ப நாளும் இன்று….