ஜெர்மனியின் Ludwigsburg நகரத்தில் வசிக்கும் பவானந்த் சுமனா தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி சுபாங்கி அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு அமரத்துவமடைந்த தோழர் ஒருவரின் புதல்வருக்கு அவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக உதவி வழங்கியுள்ளார். வவுனியா ஆச்சிபுரத்தில் வசிப்பவரும், அமரர் தோழர் ஜெயக்குமார் (ரமேஸ்) அவர்களின் புதல்வருமாகிய அரவிந்தன் அவர்களுக்கு 50,000/- பெறுமதியான மேற்படி வாழ்வாதார உதவி இன்று (14.07.2023) வழங்கிவைக்கப்பட்டது.

உதவி வழங்கும் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர், நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் பற்றிக், கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் தோழர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.