கழகத்தின் வன்னி மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் வசந்தன் (சரவணபவானந்தன் சண்முகநாதன்) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (15.07.2023) மாலை அவர் மற்றும் அவரது புதல்வன் செல்வன். சண்முகநாதன் வற்சலன் ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.