34ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு இன்று (15.07.2023)
காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை
இலவச மருத்துவ முகாம்
வவுனியா கோயில்குளம் உமாமகேஸ்வரன் வீதியில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நூலகத்தில் நினைவில்லப் பொறுப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி லிங்கநாதன் அவர்களின் ஓருங்கமைப்பில் இடம்பெற்றது. வவுனியா லயன்ஸ் கழகம், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியோர் இதற்கு அனுசரணை வழங்கியருந்தனர்.

இதன்போது இரத்தப் பரிசோதனைகள் உட்பட பல வைத்திய சேவைகள் இடம்பெற்றதோடு, கண் பரிசோதனை செய்யப்பட்டு 200ற்கும் மேற்பட்டோருக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. மேலும் பற் சிகிச்சைகளும் இடம்பெற்றன. 400ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.