ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) 34வது வீர மக்கள் தினம் இன்றைய தினம்(16-07-2023) மட்டக்களப்பு நாவற்குடாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்)மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி) தலைமையில் மாலை 4மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் கழகத்தின் சமுக மேம்பாட்டுப் பிரிவு பொறுப்பாளர் ந.ராகவன்,மாவட்டகுழு செயலாளர் கா.கமலநாதன், கழக உறுப்பினர்கள் சுமன் கைலவாசம்,பிறேமன்,உதயன், ரமேஸ் நீலன், செல்வரூபன்,ஆகியோரும்,கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
உயிர் நீத்த கழக தோழர்களுக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் நினைவுச்சுடர் ஏற்றியும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீத்த தோழர்கள் நினைவாக தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
All reactions:
Tharmini Sivakumaran, Siva Palan and 18 others