இன்றைய தினம் நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்களின் நினைவுதினம் வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள அவரது நினைவு சிலைக்கு அருகே தனியார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் திரு சி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா நகரசபை செயலாளர் திரு .செந்தில்நாதன், தமிழ்விருட்சம் திரு கண்ணன் சந்திரகுமார், முன்னாள் நகரசபைத் தலைவர்கள் ஜி.ரி.லிங்கநாதன், திரு.கௌதமன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் , நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.