18.07.2023ல் பலஸ்தீனத்தின் விடுதலை சம்பந்தமாக த.சித்தார்த்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை –
நன்றி தலைவர் அவர்களே!
நண்பர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் அவர்களால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் மிக்க தீர்மானமாகும்.
நான் நினைக்கின்றேன், இலங்கைப் பாராளுமன்றத்தில், ஓத்திவைப்புப் பிரேரணையாக இருந்தாலும் கூட இவ்வளவு நேரம், ஏறக்குறைய ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக விவாதிக்கப்படுகின்ற ஒரு பிரேரணை இதுதான்.