Header image alt text

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதால், ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கிணங்க, பாதுகாப்பு பதில் அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஷெஹான் சேமசிங்க, நிதி மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், திலும் அமுனுகம பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனக ஹேரத் பதில் தொழில்நுட்ப அமைச்சராகவும் அனூப பெஸ்குவல் பதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். Read more

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(20) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளையும் சந்தித்து இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான நீண்ட கால உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையுமென வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் Yuan Jiajun உள்ளிட்ட 20 பிரதிநிதிகள் அடங்கிய குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளது. குறித்த சீன தூதுக் குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் Chongqing நகர சபையின் செயலாளராக Yuan Jiajun கடமையாற்றுகின்றார்.  சீன தூதுக் குழுவினர் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.