சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் Yuan Jiajun உள்ளிட்ட 20 பிரதிநிதிகள் அடங்கிய குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளது. குறித்த சீன தூதுக் குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் Chongqing நகர சபையின் செயலாளராக Yuan Jiajun கடமையாற்றுகின்றார். சீன தூதுக் குழுவினர் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.