Header image alt text

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இன்றையதினம் பெருமளவில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது துப்பாக்கிகள் மற்றும் மகசின்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று கோவில்குளம் 10ம் ஒழுங்கையில் அமைந்துள்ள மைதானத்தில் 13க்கும் மேட்பட்ட அணிகள் கலந்துகொண்ட இந்த சுற்று போட்டியில் போட்டிகளின் இறுதியில் Fire Zone எதிர் சூப்பர் ஸ்டார் அணிகள் மோதிக்கொண்டன. இறுதியில் Fire Zone அணி வெற்றி பேற்று கிண்ணத்தை தனதாக்கியது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்),

Read more

கறுப்பு யூலையின் 40ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை 23ம் திகதியாகிய இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையிலான ஐந்து நாட்களாகும். வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ்மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது.

Read more

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோசிமசா அயாஸி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பான் நாட்டு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற் தடவையாகும். தற்போது இடம்பெற்று வரும் கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் இதன்போது ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Read more