1983 ம் ஆண்டு ஆடி மாதம் 25 மற்றும் 27ம் நாட்களில், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள், அரச படைகள் மற்றும் சிறை அதிகாரிகளின் அனுசரணையுடன், பெரும்பான்மையின காடையர்களாலும் கைதிகளாலும், சிறைக்கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட, 53 ஈழப் புதல்வர்களினதும் 40 வது நினைவு நாளில் அவர்கள் அனைவரையும் நினைவிற்கொண்டு, அவர்களின் விடுதலைக் கனவுகளையும் இனப் பற்றுதலையும் போற்றிடுவோம்,
எம் அஞ்சலிகளையும் காணிக்கையாக்குவோம்.

ஆடி 25ம் நாளில் படுகொலை செய்யப்பட்டவர்கள்:-
1. தங்கத்துரை என அழைக்கப்படும் நடராசா தங்கவேல்
2. குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்
3. ஜெகன் என அழைக்கப்படும் கணேசானந்தன் ஜெகநாதன்
4 தேவன் என அழைக்கப்படும் செல்லத்துரை சிவசுப்பிரமணியம்
5 சிவபாதம் மாஸ்டர் என அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம்
6 செனற்றர் என அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன்
7 அருமைநாயகம் அல்லது சின்னராசா என அழைக்கப்படும் செல்லத்துரை ஜெயரட்னம்
8 அன்ரன் என அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன்
9 ராசன் என்றழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம்
10 சுரேஸ் மாஸ்டர் என அழைக்கப்படும் காசிப்பிள்ளை சுரேஸ்குமார்
11 சின்னத்துரை அருந்தவராசா
12 தேவன் அல்லது அரபாத் என அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார்
13 மயில்வாகனம் சின்னையா
14 சித்திரவேல் சிவானந்தராசா
15 கணபதிப்பிள்ளை மயில்வாகனம்
16 தம்பு கந்தையா
17 சின்னப்பு உதயசீலன்
18 கணேஷ் அல்லது கணேஸ்வரன் என அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்
19 கிருஸ்ணபிள்ளை நாகராசா
20 கணேஷ் என அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம்
21 அம்பலம் சுதாகரன்
22 இராமலிங்கம் பாலச்சந்திரன்
23 பசுபதி மகேந்திரன்
24 கண்ணன் என அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன்
25 குலம் என்றழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம்
26 மோகன் என்றழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார்
27 ராஐன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார்
28 ராஜன் அல்லது ராசன் என்றழைக்கப்படும் கோதண்டப்பிள்ளை தவராஜலிங்கம்
29 கொழும்பான் என்றழைக்கப்படும் கருப்பையா கிருஸ்ணகுமார்
30 யோகன் என்றழைக்கப்படும் யோகநாதன்
31 அமுதன் அல்லது அவுடா என்றழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம்
32 அந்தோணிப்பிள்ளை உதயகுமார்
33 அழகராசா ராஜன்
34 வேலுப்பிள்ளை சந்திரகுமார்
35 சாந்தன் என்றழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார்
ஆடி 27ம் நாளில் படுகொலை செய்யப்பட்டவர்கள்:-
1 வைத்தியர் சோமசுந்தரம் இராஜசுந்தரம்
2 பொன்னம்பலம் தேவகுமார்
3 பொன்னையா துரைராஜா
4 முத்துக்குமார் ஶ்ரீகுமார்
5 அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம்
6 செல்லச்சாமி குமார்
7 கந்தசாமி சர்வேஸ்வரன்
8 அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை
9 சிவபாலன் நீதிராஜா
10 ஞானமுத்து நவரட்ணசிங்கம்
11 கந்தையா ராஜேந்திரம்
12 செல்வநாயகம் பாஸ்கரன்
13 சோமசுந்தரம் மனோரஞ்சன்
14 ஆறுமுகம் சேயோன்
15 தமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன்
16 சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம்
17 செல்லப்பா ராஜரத்தினம்
18 குமாரசாமி கணேசலிங்கம்