Header image alt text

இலங்கையில் பிறந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி கனேடிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பூர்விக குடிகள் உறவுகள் அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதன்முதலில் 2015 இல் scarborough rough park இன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்னர் கனடாவின் நீதி அமைச்சருக்கும் சட்டமா அதிபருக்கும் நாடாளுமன்றச் செயலாளராகவும் அரச-சுதேச உறவுகள் அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். Read more

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாத், ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத், ஐக்கிய இலங்கை தௌஹீத் ஜமாத் மற்றும் ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா ஆகிய 5 அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. Read more

பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை மேற்குலக நாடுகள் எதிர்ப்பது போன்று இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா கடுமையான எதிர்த்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான் பசிபிக் பிராந்தியத்தில் புதிய ஏகாதிபத்தியம் உருவாகி வருவதாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியூ கலிடோனியா, பப்புவா நிவ் கினியா, வனுவாட்டு குடியரசு (Vanuatu) ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கடந்த 24ஆம் திகதி முதல் உத்தியோகப்பூர்வ விஜயங்களை மேற்கொண்டார். Read more

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கருவாதோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.