ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாத், ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத், ஐக்கிய இலங்கை தௌஹீத் ஜமாத் மற்றும் ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா ஆகிய 5 அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் நோக்கில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.