மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்வதற்காக  நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டதுடன், அதன் உறுப்பினர்களாக உயர் நீதிமன்ற நீதியரசர் M.H.M.D. நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்த்ரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஷ்வரி பற்குணராஜா பின்னர் நியமிக்கப்பட்டார்.

இதேவேளை

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

மனிதவள பற்றாக்குறை காரணமாக முறைப்பாடுகளை விசாரணை செய்வதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, ஊழியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வொன்றை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.

அரச அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வழிகாட்டிகளை தயாரித்து வழங்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அதன் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதியரசர் M.H.M.D. நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி நியமிக்கப்பட்டனர்.

ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஷ்வரி பற்குணராஜா பின்னர் நியமிக்கப்பட்டார்.