Header image alt text

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவை வழங்க கப்பல் நிறுவனத்தின் சட்டத்தரணிகள் இணங்கியுள்ளனர். சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில், இலங்கைக்கு நேற்று(29) அறிவிக்கப்பட்டதாக சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கடல் சூழலைப் பாதுகாப்பதற்காகவும் விபத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காகவும் இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. Read more

இலங்கைக்கான அதிக கடன் வழங்குநர் என்ற வகையில்இ ஜப்பான்இ இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளினால் மேற்கொள்ளப்படும் கடன் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் முயற்சியில் இணைவதற்கு சீனா வரவேற்கப்படுவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய – ஜப்பான் மன்றத்தில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடன் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கான நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுக்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார். Read more