Header image alt text

31.07.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் காஸ்ட்ரோ (சவரிமுத்து வெள்ளிமயில்- முல்லைத்தீவு), தோழர் ஆனந்தபாபு (கிருஷ்ணகுமார்- திருகோணமலை) ஆகியோரின் 35ஆவது நினைவு நாள் இன்று….

மலர்வு 12/03/1963
உதிர்வு 30/07/2023
பண்டத்தரிப்பு, வடலியடைப்பு, கலட்டு வீதியை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் றொபின் (சின்னத்துரை குமாரதாசன்) அவர்கள் நேற்று (2023.07.30) ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

Read more

புதிய பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கில மொழி மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதேவேளை, நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவுகளினால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வது தாமதமாகும் என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ட்விட்டரில் செயலூக்கமுள்ளவராக இருப்பதுடன் இலங்கை தொடர்பான முக்கியமான சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஜூலி சங் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாகவும் டிசம்பரில் இலங்கையை விட்டு வெளியேறுவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. Read more

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. இதனையடுத்து இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதரகம் தொடர்பான செயற்பாடுகளை புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் பொறுப்பேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே நோர்வே தமது தூதரகத்தை இலங்கையில் மூடுவதாக அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையை தவிர ஏனைய பல நாடுகளின் தூதரகங்களையும் நோர்வே மூடிவருகின்றது.