இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ட்விட்டரில் செயலூக்கமுள்ளவராக இருப்பதுடன் இலங்கை தொடர்பான முக்கியமான சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஜூலி சங் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாகவும் டிசம்பரில் இலங்கையை விட்டு வெளியேறுவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இதுகுறித்து ஆராய்ந்தபோது அது பொய்யான செய்தி என்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமும் ஜூலி சங்கை திரும்ப அழைக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் அந்த தகவல் முற்றிலும் போலியானது எனவும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்ட ஜூலி சங் யு.எஸ்.ஆகப் 2022இல் இலங்கைக்கான தூதுவராக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது