13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கோரியதற்கு அமைவாக அது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவது குறித்து இன்றுகாலை 10மணியளவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) நிறைவேற்றுக்குழு கூட்டம் மெய்நிகர் வழியாக நடைபெற்றது.
இதன்போது காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட முழுமையான அதிகாரங்களுடன் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், சிங்கள ஆக்கிரமிப்பு, மத ஆக்கிரமிப்பு, பறளாய் முருகன் கோயில் அரச மரத்தை உரிமை கோரும் முறையற்ற வர்த்தமானி உள்ளிட்ட தமிழர்களின் தொல்லியல் சின்னங்களை அபகரிக்கும் வர்த்தமானிகளை மீளப்பெற வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு கடிதமெழுத இதன்போது தீர்மானிக்கப்பட்டது.