கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதிக்கு திணைக்கள அதிகாரிகள் கள விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதிக்கு நாளை மறுதினம் (10) கள விஜயம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் T. பார்த்திபன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணைகளின் போது தொல்பொருள் திணைக்களம் முன்னிலையாகாத நிலையில், குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ள, தொல்பொருள் திணைக்களம் கடிதம் மூலம் மூன்று வார கால அவகாசத்தைக் கோரியுள்ளது.
இந்த நிலையில், அனைத்து திணைக்கள அதிகாரிகளும் நாளை மறுதினம் கள விஜயம் மேற்கொண்டு அது தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ள இன்று தீர்மானிக்கப்பட்டது.