Header image alt text

09.08.2022இல் வவுனியாவில் மரணித்த தோழர் காண்டீபன் (கணபதி கேசவப்பிள்ளை – மூதூர்) அவர்களின் ஓராம் ஆண்டு நினைவுகள்
09.08.2022இல் மன்னாரில் மரணித்த தோழர் மரியான் (தீயோகு மரியதாஸ் – பள்ளக்கமம்) அவர்களின் ஓராம் ஆண்டு நினைவுகள்

வடக்கு, கிழக்கு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளுக்கு நீதி கோரி 2000 ஆவது நாளாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, தம்பிலுவில் விஷ்ணு கோவில் முன்பாகவிருந்து அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியூடாக திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை ​பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. Read more

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின்(Insulin) மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக நோயாளர்கள் அவற்றை பணம் செலுத்தி கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டுள்ளது. மிகக் குறைந்தளவானவர்களுக்கு மாத்திரமே இன்சுலின் மருந்தை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமை காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். Read more