முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதிக்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.பிரதீபன்
தலைமையிலான குழுவினர் இன்று கள விஜயம் செய்தனர். தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி  மற்றும் ஏனைய திணைக்கள பிரதிநிதிகளும் இந்த கள விஜயத்தில் இணைந்திருந்தனர்.

இன்றைய கள விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், அகழ்வுப் பணிக்கான திட்டம் தொடர்பில் ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் விடயங்களை தாக்கல் செய்வதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் தீர்மானித்துள்ளனர்.

கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி சில மனித எச்சங்கள்  கண்டெடுக்கப்பட்டன.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.