Header image alt text

13.08.1992இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் காந்தன் (பூபாலப்பிள்ளை உமாகாந்தன் – பனங்காடு), ரகுவரன்(கணபதிப்பிள்ளை வரதராஜா – குருமண்வெளி) ஆகியோரின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையை எதிர்காலத்தில் பத்தாம் தரத்தில் நடத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார். இதனூடாக ஒரு வருடத்துக்கு முன்னதாகவே மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் வாய்ப்பை பெறவுள்ளனர். Read more

தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழகமே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.  இந்திய மக்களவையின் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் மோடி இதனை கூறியுள்ளார். தமிழகத்தை ஆண்ட திராவிட முன்னேற்றக் கழகமே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதாகவும் அவ்வாறு வழங்கியதன் பின்னர், கச்சத்தீவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து தனக்கு கடிதம் எழுதி வருவதாகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more