Header image alt text

தமது பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது. குறித்த குழுவினர் அடுத்த மாதம் 27ஆம் திகதி நாட்டில் தங்கியிருப்பார்கள் என கூறப்படுகின்றது. இலங்கைக்கு வழங்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்விற்காக குறித்த குழு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கோரிக்கைக்கு அமைய, இந்திய கடற்படைக்கு சொந்தமான Donier-228 கடல் கண்காணிப்பு விமானம்  இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமானப்படை முகாமில் விமானத்தை கையளிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த Donier-228  கடல் கண்காணிப்பு விமானம் இரண்டு வருடங்களுக்கு  நாட்டின் விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க இதனை பெற்றுக்கொண்டுள்ளார். Read more

சீன ஆய்வுக் கப்பல் அடுத்த மாதம் நாட்டிற்கு வரவுள்ள நிலையில், இலங்கை மீண்டும் ஒரு பூகோள அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கரிசனையை ஈர்த்துள்ள  Shi Yan 6 கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதை இலங்கை கடற்படை இன்று பிற்பகல் உறுதிப்படுத்தியது. இந்த கப்பல் 17 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. Read more