இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு பல தடவைகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர்கள் முன்பு இருந்த அதே பாடசாலைகளில் பணிபுரிவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சேவையின் தேவை காரணமாக சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் தக்கவைத்துக்கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு மேலதிக ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் காணப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.