Header image alt text

திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெலி புறாத்தீவை பொதுமக்கள் மீண்டும் பார்வையிடுவதற்கான திட்டத்தை கடற்படை ஆரம்பித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், பாடசாலை மாணவர்கள், கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடற்படையின் மத்தியப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெலி புறா தீவினை பார்வையிடுவதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், குறைந்த கட்டணங்களுடன் தரமான சேவை வழங்கப்படுமென கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இன்று முதல் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வாராந்தம் ஆறு தடவைகள், மதுரை மற்றும் கொழும்புக்கு இடையே விமான சேவையை ஆரம்பித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவின் மதுரை மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் விமானங்களை இயக்கவுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு பயணிகள் கப்பல்சேவையை ஆரம்பிக்க இந்தியாவின் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள கெவாடியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்காக நாகை துறைமுகம் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுப்பில் இருந்து மீண்டும் கடமைக்கு திரும்பிய வலிமேற்கு பிரதேச சபையில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் சிலர், பிரதேசசபை செயலாளரினால் அழுத்தங்களுக்கு உள்ளாவதாக சம்பந்தப்பட்ட திணைக்கள உயர்மட்டத்திற்கு முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடமும் முறையிடப்பட்டுள்ளது.

Read more